ரூ.67,000 மதிப்பு டிக்கெட் திருட்டு
வாணியம்பாடி:சென்னை, கோயம்பேடு பணிமனையை சேர்ந்த அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு ஓசூரிலிருந்து பயணியரை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்றது. அன்றிரவு, 10:30 மணிக்கு ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட்டில் பயணியரை இறக்கி விட்டு புறப்பட்டது-. சிறிது துாரம் சென்றதும், பஸ் டிரைவர் இருக்கைக்கு கீழே, பஸ் கண்டக்டர் கன்னியப்பன் வைத்திருந்த, 67,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் இருந்த பை மாயமாகி இருந்தது தெரியவந்தது.அதில், பணம் இருக்கும் எனக்கருதி பஸ்சில் பயணித்த பயணி யாரோ திருடி சென்றுள்ளார். கண்டக்டர் கன்னியப்பன், 53, புகாரில், ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.