கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை அருகே, பைக்கில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம், மூக்கனார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தியதில் அதில், 50 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.இதையடுத்து கஞ்சாவை பைக்கில் கொண்டு சென்று, விற்பனை செய்து வந்த நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியை சேர்ந்த முனியப்பன், 28, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.