உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காந்தி நகர் ரோட்டரி கிளப் புது நிர்வாகிகள் பதவி ஏற்பு

காந்தி நகர் ரோட்டரி கிளப் புது நிர்வாகிகள் பதவி ஏற்பு

திருப்பூர் : திருப்பூர் காந்திநகர் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, ராஜ் தலைமையில் நடந்தது. புதிய தலைவராக ரத்தினசாமி, செயலாளராக முருகேசன் மற்றும் நிர்வாக குழுவினர் பதவி ஏற்றனர். ரோட்டரி மாவட்ட 2013-14ம் ஆண்டின் கவர்னர் செந்தில்நாதன் சிவா, துணை கவர்னர் பாலசுப்ரமணி, பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிறவியிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்த ஒரு வயதுடைய யுவராஜ்க்கு செயற்கை கை பொருத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரு கால்களையும் இழந்த பட்டதாரி வாலிபர் பழனிசாமிக்கு, நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.உடுமலை, கம்பம், புளியம்பட்டியை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் சார்பில் நடத்தப்படும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில், ஒரு குழந்தைக்கான ஆண்டு செலவு தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ