உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமுதாய நலனில் அக்கறை செலுத்த எஸ்.பி., அறிவுரை

சமுதாய நலனில் அக்கறை செலுத்த எஸ்.பி., அறிவுரை

திருப்பூர் : ''சமுதாய நலனில் மாணவர்கள் அக்கறை காட்ட வேண்டும்,'' என எஸ்.பி., பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, எஸ்.பி., அலுவலக முகவரியிட்ட 1,500 போஸ்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்க்காவல் படை தலைமை பொது உதவி கமாண்டர் சிவக்குமார் தலைமை வகித்தார்; டி.எஸ்.பி., ராஜாராம் முன்னிலை வகித்தார்; தலைமை ஆசிரியர் துரைசாமி வரவேற்றார்.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசியதாவது:சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்து அறிந்துள்ள மாணவர்கள், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்; ரோடுகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். பொது பிரச்னைகள் தொடர்பான புகார்களை, போஸ்ட் கார்டுகளில் எழுதி போலீசாருக்கு தெரிவிக்கலாம்.போக்குவரத்தான பகுதிகளில், விசேஷ காலங்களில் போலீசாருடனும், ஊர்க்காவல் படையுடனும் மாணவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதேபோல் சமுதாய நலனில் தொடர்ந்து, மாணவர்கள் அக்கறை காட்ட வேண்டும், என்றார். ஏரியா கமாண்டர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை