வங்கி மேலாளர் குடும்பத்துக்கு ரூ.1.05 கோடி இழப்பீடு
திருப்பூர்:கோவையைச் சேர்ந்தவர் சங்கர், 26; தனியார் வங்கி மேலாளர். கடந்த ஆண்டு கோவை - அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்ற போது, கார் மோதி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு, 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சங்கரின் பெற்றோர், திருப்பூர் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.வழக்கு, திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் நடந்த மெகா லோக் அதாலத் நிகழ்ச்சியில் விசாரணைக்கு நேற்று எடுக்கப்பட்டது. இதில், 1.05 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் முன்வந்தது. இதற்கான காசோலையை, ஐகோர்ட் நீதிபதிகள் கார்த்திகேயன், மஞ்சுளா, திருப்பூர் மாவட்ட நீதிபதி குணசேகரன் ஆகியோர் சங்கரின் பெற்றோரிடம் வழங்கினர்.