உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓட்டு எண்ணும் மையத்தில் 25 நிமிடம் மின்சார தடை

ஓட்டு எண்ணும் மையத்தில் 25 நிமிடம் மின்சார தடை

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட இ.வி.எம்., மெஷின்கள் பல்லடம் ரோடு எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு, தெற்கு, கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு தனித்தனி 'ஸ்ட்ராங் ரூம்' அமைத்து போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகம் 'சிசிடிவி' கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுகின்றன. இச்சூழலில், நேற்று மாலை திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக, பவானி தொகுதி ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மெஷின்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சாரம் தடை ஏற்பட்டது.இதனால், 'சிசிடிவி'வில், காட்சிகள் தெரியவில்லை. இதையறிந்த, கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு விரைந்தனர்.உடனடியாக மின்வாரிய சிறப்பு குழுவினர், பழுதை சீரமைத்தனர். இதனால், 25 நிமிடத்துக்கு பின், மீண்டும் 'சிசிடிவி' கேமராக்கள் வேலை செய்ய ஆரம்பித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை