4 நாள் கோர்ட் புறக்கணிப்பு வக்கீல் சங்க கூட்டத்தில் முடிவு
- நமது நிருபர் -வக்கீல் சேம நல நிதியை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; சேமநல கட்டணம் 30 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டது ரத்து செய்ய வேண்டும்; வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வக்கீல்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இன்று முதல் வரும் மார்ச் 1 வரை நான்கு நாட்கள் கோர்ட் நடவடிக்கையில் புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வ கேட்ஸ் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.நேற்றுமுன்தினம் இம்மூன்று சங்க நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.