மேலும் செய்திகள்
தேனீக்கள் கடித்து5 பேர் காயம்
13-Mar-2025
தாராபுரம்; தாராபுரத்தில் தேனீக்கள் கொட்டியதில், ஐந்து பேர் காயம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நேற்று மதியம் கனமழை பெய்தது. அப்போது, தாராபுரம் அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக வந்த சிலரை, மழை பெய்ததால், கூட்டில் இருந்து கலைந்த தேனீக்கள், ஐந்து பேரை கொட்டியது. காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Mar-2025