உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயன்பாடு இல்லாத ரயில்வே கட்டடம் 

பயன்பாடு இல்லாத ரயில்வே கட்டடம் 

உடுமலை;மைவாடி ரயில் நிறுத்தத்தில், உள்ள பழமையான கட்டடத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், மைவாடி ரயில் நிறுத்தம் அமைந்துள்ளது. முதன்முறையாக பழநி, உடுமலை வழியாக ரயில் வழித்தடம் அமைக்கப்பட்ட போதிருந்தே இந்த ரயில் நிறுத்தம் பயன்பாட்டில் உள்ளது.அப்போது, கட்டப்பட்ட பழமையான ரயில்வே கட்டடம் தற்போது பயன்பாடு இல்லாமல், காட்சிப்பொருளாக மாறி விட்டது.விஷ ஜந்துகள் நடமாட்டமும் உள்ளது. இருப்பினும், கம்பீரமாய் காணப்படும் இந்த கட்டடத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது:மைவாடி ரயில் நிறுத்தம் அருகில், பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல ஆலைகள் அமைந்துள்ளது.எனவே, பழமையான கட்டடத்தை புதுப்பித்து சரக்குகளை கையாளும் வசதியை ஏற்படுத்தினால், தொழிற்சாலை நிர்வாகத்தினரும் பயன்பெறுவார்கள். இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை