உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சைக்கிளால் மாறிய பயணம்: றெக்கை கட்டி பறக்கலாம்

சைக்கிளால் மாறிய பயணம்: றெக்கை கட்டி பறக்கலாம்

தங்கராஜ், சைக்கிள் ஷோரூம் உரிமையாளர்:சோளிபாளையம் சொந்த ஊர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. பனியன் நிறுவனத்தில் டெய்லராக சேர்ந்து, சூப்பர்வைசர் என அடுத்தடுத்த நிலையை அடைந்தேன்.தொழில் அனுபவங்களைக்கொண்டு, கடந்த 2005ல், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனத்தை துவக்கினேன். படிப்படியாக, 2008ல், ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை துவக்கினேன். போலந்து நாட்டுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்தேன்.சிறுவயது முதலே, சைக்கிகள் ரெய்டில் மிகுந்த ஆர்வம். ரைடர்ஸ் கிளப் என்ற பெயரில், நண்பர்கள் இணைந்து இன்றுவரை தினமும் இரண்டு மணி நேரம் சைக்கிளில் ரெய்டு சென்றுகொண்டிருக்கிறோம்.திருப்பூரில் பெரிய அளவிலான சைக்கிள் ஷோரூம்கள் இல்லை. கடந்த 2010 ல், திருப்பூர் - அவிநாசி ரோட்டில் பெயரில், சைக்கிள் விற்பனை ஷோரூம் துவக்கினேன். ஆடை ஏற்றுமதியை விடவும், சைக்கிள் வர்த்தகம் எனக்கு கைகொடுத்தது. அதனால், 2018ல் ஆடை ஏற்றுமதியை விட்டுவிட்டு, முழுமையாக சைக்கிள் வர்த்தகத்தில் கவனம் செலுத்தினேன்.கடந்த 2022 ல், காங்கயம் ரோட்டில் மற்றொரு ஷோரூமை உருவாக்கி செயல்படுத்திவருகிறேன். உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்பிலான அனைத்து சைக்கிகள்களையும் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்கிறோம். தற்போது, மாதம் 90 சைக்கிள்கள் விற்பனையாகின்றன. இன்றைய அவசர காலத்தில், பைக், கார்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆடை ஏற்றுமதியைவிட, சைக்கிள் வர்த்தகத்தில் சவால்கள் அதிகம் உள்ளன. ஆனாலும், மனதுக்கு பிடித்ததை செய்வதால், சோதனைகள் பெரிதாக தெரிவதில்லை.

சைக்கிளை மறந்ததால்

ஆரோக்கியம் பறிபோனதுபோதிய உடற்பயிற்சி இல்லாததால், இளம் வயதினரும் கூட நோய்களில் பிடியில் சிக்கிவிடுகின்றனர். தினமும் சைக்கிள் ரெய்டு செல்வது, சிறந்த உடற்பயிற்சியாகவும், உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தருவதாகவும் உள்ளது.சிறுவர்கள், இளைஞர்களுக்கு, சைக்கிள் போட்டிகள் நடத்தியும், சைக்கிளில் சென்று மரம் நடுவது என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகிறேன். இதைப்பார்து பலருக்கும் சைக்கிகள் ஓட்டவேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது. ஒவ்வொரு மாதமும் புதிதாக 30 பேரையாவது சைக்கிள் ஓட்டவைப்பதற்கான முயற்சியில் முனைப்பு காட்டுகிறோம்.தொடர்ந்து ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி, சைக்கிள்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தோடு கூடிய வர்த்தக முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே எனது இலக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ