உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெயரளவிற்கு நடந்த குறை கேட்பு  கூட்டம் ; விவசாயிகள் அதிருப்தி

பெயரளவிற்கு நடந்த குறை கேட்பு  கூட்டம் ; விவசாயிகள் அதிருப்தி

உடுமலை; உடுமலையில், வனத்துறை சார்பில் நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் பெயரளவிற்கு நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி, மூன்று ஆண்டுக்கு முன், வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் அடிப்படையில், மாதம் ஒரு முறை, மாவட்ட வன அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.ஆனால், குறை தீர் கூட்டம் நடத்துவதிலும், வன விலங்குகளை கட்டுப்படுத்துவதிலும் வனத்துறை அலட்சியம் காட்டி வந்தனர். இதனையடுத்து, மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, மாதம் தோறும், 5ம் தேதி, வனச்சரக அலுவலகங்களிலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, மாவட்ட வன அலுவலகத்திலும் குறை தீர் கூட்டம் நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.உடுமலை வனச்சரக அலுவலகத்தில், நேற்று கூட்டம் நடத்துவதாக, ஒரு மணி நேரத்திற்கு முன் விவசாயிகளுக்கு வனத்துறை தகவல் கொடுத்ததால், இரு விவசாயிகள் மட்டும் வந்திருந்தனர். அவர்களும், பெயரளவிற்குகூட்டம் நடத்துவதால் பயனில்லை; முறைப்படி, அறிவித்து நடத்த வேண்டும், என கூறி வெளிநடப்பு செய்தனர்.எனவே, மாவட்ட வன அலுவலர் தலைமையில் முறையாக, மாதத்தில், ஒரு கிழமையில் கூட்டம் நடத்தவும், வன விலங்குகளால் பாதிப்பை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !