உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேறியது

மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேறியது

அவிநாசி;அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில், துணைத் தலைவர் மோகன் முன்னிலையில் நடந்தது. செயல் அலுவலர் இந்துமதி (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்ட விவாதம்:தங்கவேலு (தி.மு.க.,):சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. தடுத்து நிறுத்த வேண்டும். 2,500 மாணவியர் படிக்கும் பள்ளி தேவாலயம், அங்கன்வாடி மையம் என பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய இடங்கள் உள்ளன. மதுபான கூடம் அமைந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயமும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும்.கருணாம்பாள் (காங்.,) : ஸ்ரீராம் நகர் பகுதியில் தனியார் இடத்தில் பல மாதங்களாக புதர்கள் மண்டி முள் காடாக உள்ளது. அருகில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீரை காலி இடத்தில் ஊற்றி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.கவிதா (அ.தி.மு.க.,): அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி கடைகளில் அதிக அளவில் பிளாஸ்டிக், பாலிதீன் விற்பனை அதிகரித்துள்ளது. கோபாலகிருஷ்ணன் - (காங்.,) : பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் கொடுத்துள்ள பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசிய பின், பேரூராட்சியில் எந்தவித பெயருடனும் மதுபான கூடம் அமைவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை