சந்திப்பு பகுதியில் சிக்னல் தேவை
உடுமலை : உடுமலை அருகே குடிமங்கலத்தில், பொள்ளாச்சி - தாராபுரம், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு உள்ளது.அப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சந்திப்பு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது.ஆனால், பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, பொள்ளாச்சி நோக்கி செல்ல சந்திப்பு பகுதியில், வாகனங்கள் திரும்பும் போது, அப்பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது.மேலும், அனைத்து ரோடுகளிலும் இருந்து, தாறுமாறாக வாகனங்கள் கடக்கும் போது, போக்குவரத்து பாதிக்கிறது.எனவே அப்பகுதியில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீராக்க வேண்டும் என நீண்ட காலமாக வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.