உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து,,

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து,,

திருப்பூர்: திருப்பூர், ஆண்டிபாளையம் - இடுவம்பாளையம் ரோட்டில் பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவ-னம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால், நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 12:30 மணியளவில் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, பனியன், நுால் உள்ளிட்ட அனைத்தும் எரிய துவங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தெற்கு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதாலும், தீ அனைத்து இடத்துக்கும் பரவியதால், தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது.தொடர்ந்து எட்டு மணி நேரம் போராடி, காலை, 9:00 மணியள-வில் தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள், மெஷின்கள் எரிந்து போனது. விபத்துக்-கான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்து சென்ட்ரல் போலீ-சார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ