மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி., கார்டு
31-Aug-2024
ஸ்கூட்டர் வழங்க பயனாளி தேர்வு முகாம்
04-Sep-2024
மகளிர் உரிமைத்தொகை பெற குவிந்த பெண்கள்
17-Aug-2024
திருப்பூர்:பேட்டரி வாகனத்தை காட்சிப்பொருளாக நிறுத்திவைத்துள்ளதால், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பரிதவிக்கின்றனர்.கலெக்டர் அலுவலக தரைதளத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் சார்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, அடையாள அட்டை வழங்கு வதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர்.கலெக்டர் அலுவலக நுழைவாயிலிலிருந்து, கூட்ட அரங்கம் வரை முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில், சமூக பாதுகாப்பு துறை சார்பில், பேட்டரி வாகனம் இயக்கப்பட்டு வந்தது.குறைகேட்பு கூட்டம் நடைபெறும் திங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெறும் வெள்ளிக்கிழமை என, வாரம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி வாகனத்தை இயக்கினர்.இந்நிலையில், சில மாதங்களாக, கலெக்டர் அலுவலகத்தில் பேட்டரி வாகன இயக்கத்தை சமூக பாதுகாப்புத்துறை நிறுத்தி விட்டது. வாகனத்தை, ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு அலுவலர் குடியிருப்பு வளாக பார்க்கிங் பகுதியில், ஓரங்கட்டி வைத்துள்ளனர்.அங்கு, எந்த பயன்பாடுமின்றி, வெறும் காட்சிப்பொருளாக பேட்டரி வாகனம் உள்ளது.பேட்டரி வாகனம் இயங்காததால், கலெக்டர் அலுவலகத்தில், முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும், நுழைவாயிலிலிருந்து, 400 மீ., துாரத்தில் உள்ள கூட்ட அரங்கை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர். மிகவும் சிரமப்பட்டே, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கால்கடுக்க நடந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.குறிப்பாக, கால் பாதித்த, கண் பாதித்த மாற்றுத்திறனாளிகள், தட்டுத்தடுமாறி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லவேண்டியுள்ளதால், மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகின்றனர்.தொடர் இயக்கம் இல்லாததால் பேட்டரி வாகனத்தின் பேட்டரிகள் பழுதாகி, இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் நிலையும் உருவாகிறது.கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துசெல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி, பேட்டரி வாகனத்தை மீண்டும் இயக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
31-Aug-2024
04-Sep-2024
17-Aug-2024