மேலும் செய்திகள்
நீர்த்தொட்டியில் சுரக்கும் கழிவுநீர் ஊற்று
26-Aug-2024
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்தி நகர் பகுதி கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி குமரானந்தபுரம் கற்பக விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது. பகுதி செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார்.மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் ஆகியோர் கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசினர். பொள்ளாச்சி ஜெயராமன், பூத் ஏஜென்ட்களிடம் கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வாக்குகள் குறித்து ஆய்வு நடத்தினார்.சில பூத்களில் வாக்குகள் குறைவுக்கு காரணம் என்ன என கேட்டறிந்த அவர், 'சட்டமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.
26-Aug-2024