உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் யாகசாலை பூஜைகள் துவக்கம்

ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் யாகசாலை பூஜைகள் துவக்கம்

திருப்பூர்: மேற்குபதி அபிேஷகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா முன்னிட்டு நேற்று யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.அவிநாசி வட்டம், மேற்குபதியில் அமைந்துள்ள அபிேஷகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவிலில் நாளை 16 ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது.இதையொட்டி கடந்த 8ம் தேதி, கணபதி யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தி, கோபுர கலசம் அமைக்கப்பட்டது. கடந்த 12ம் தேதி விநாயகர் மற்றும் வாஸ்து பூஜை ஆகியனவும், 13ம் தேதி தீர்த்தக் குட ஊர்வலம் உள்ளிட்டவையும் நடைபெற்றது.நேற்று விநாயகர் பூஜையைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், யாகசாலை எழுந்தருளல் ஆகியன நடந்தது.நேற்று இரவு முதல்கால யாக பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது.இன்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது.நாளை (16 ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை