மேலும் செய்திகள்
இன்று இனிதாக செங்கை புத்தக திருவிழா
22-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் அருகே புற்றுகண் நாகாத்தம்மன் கோவிலில் சிலை, வேலை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, திருட்டில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூரை அடுத்த முதலிபாளையத்தில் புற்றுக்கண் ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நல்லசிவம் என்பவர் பூஜை செய்து வருகிறார்.வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் இக்கோவிலில் வழிபடுவது வழக்கம். நேற்று காலை பூஜை செய்ய நல்லசிவம் சென்ற போது, கருப்பராயன் சாமி சிலை, வேல் ஆகியன சேதப்படுத்தப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.தொடர்ந்து, பீரோவில் இருந்த துணிகளை கலைக்கப்பட்டும், எண்ணெயை கீழே ஊற்றியும், முட்டைகளை புற்று மீது வீசியுள்ளனர். பீரோவில் இருந்த செம்புமணி திருடு போயிருந்தது.தகவலின் பேரில் விரைந்து சென்ற ஊத்துக்குளி போலீசார்,சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
22-Feb-2025