உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

உடுமலை : தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டார அலுவலகங்களின் முன், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பத்தாண்டு பணிமுடித்த, அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டு வழங்கப்பட வேண்டும் உட்பட, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.இதில், உடுமலையில் 150, குடிமங்கலத்தில் 50, மடத்துக்குளத்தில் 60 பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை