உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே ஸ்டேஷனில் தமிழில் அறிவிப்பு  

ரயில்வே ஸ்டேஷனில் தமிழில் அறிவிப்பு  

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்ம், டிக்கெட் கவுன்டர் அருகே அறிவிப்பு பலகை உள்ளது. இதில் அன்றைய தினம் ரயில்கள் வந்து செல்வது குறித்த 'அப்டேட்' நிலவரம், தாமதம், ரயில் ரத்து உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படும். இந்த அறிவிப்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டு வந்தது. இந்நிலையில், திருச்சி - பாலக்காடு டவுன் பாசஞ்சர் ரயில் (எண்:16843) இயக்கம், வரும், 31ம் தேதி வரை இருகூர் - போத்தனுார் இடையே தடம் மாற்றப்பட்டது; சிங்காநல்லுார், பீளமேடு, வடகோவை, கோவை ஜங்ஷன் செல்லாதென அறிவிக்கப்பட்டது.இது, அறிவிப்பு பலகையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.---திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் இயக்கம் மாற்றம் குறித்த அறிவிப்பு தமிழில் எழுதப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ