போதை ஒழிப்பு ஊர்வலம்
திருப்பூர், : திருப்பூர் மேற்கு மண்டல தவ்ஹீத் ஜமாத் கிளைகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மங்கலம் அடுத்த வடுகன்காளிபாளையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பொருளாளர் சிராஜ், துணை செயலாளர் காஜா பாய், தொண்டர் அணி சித்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஏராளமான சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பியபடி கலந்து கொண்டனர். ஊர்வல முடிவில் மாநில பேச்சாளர் இர்பான் பேசினார்.