மேலும் செய்திகள்
நீர்த்தொட்டியில் சுரக்கும் கழிவுநீர் ஊற்று
26-Aug-2024
திருப்பூர்:முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பாழடைந்த கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. திருப்பூர் அடுத்த முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோவை வீட்டு வசதி வாரியத்தால் கடந்த 1987ம் ஆண்டில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. அப்போது மக்களின் வசதிகளுக்காக ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என, ஆறு கட்டடங்கள் கட்டப்பட்டது. தற்போது, இரண்டு கட்டடங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள, நான்கு அரசு கட்டடங்களும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் புதர் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கஞ்சா, குட்கா, போதை ஊசிகள் பயன்படுத்துவது, போதையில் குடியிருப்பு பகுதிகளில் மோதி கொள்வது போன்ற செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகிறது. பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வசிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், ''சமூக விரோதிகளை பொதுமக்கள் தட்டி கேட்டால், மிரட்டுகின்றனர். போலீசாரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில், கடந்த டிச., மாதம் புறக்காவல் நிலையத்தை திறந்தனர். அதுவும், வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் அனுமதி பெறாமல் திறக்கப்பட்டதால், மீண்டும் மூடப்பட்டது. போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால் போதை ஆசாமிகள் 'அட்ராசிட்டி' செய்து வருகின்றனர். அமைச்சர், கலெக்டரிடம் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டடங்களை மாற்று துறையினர் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.முதலிபாளையம் ஊராட்சி தலைவர் மயூரி பிரியாவிடம் கேட்டதற்கு, ''போலீசாரிடம் புகார் தெரியப்படுத்தியதால், ரோந்து வருகின்றனர். கட்டடங்கள் வீட்டு வசதி வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. ஊராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்றார்.---மொத்தம் 5 படங்கள்ஒரு படம்------முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில், ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷன் சார்பில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்திற்கு, வீட்டு வசதி வாரியம், அனுமதி வழங்காததால் செயல்படாமல் உள்ளது.2 படங்கள்முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் பாழடைந்துகிடக்கின்றன.2 படங்கள்பாழடைந்த கட்டடங்களில் கிடக்கும், மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், சிரிஞ்சுகள்.
26-Aug-2024