உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மேல்நிலைப்பள்ளியில் தொல்லியல் பயிலரங்கம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் தொல்லியல் பயிலரங்கம்

உடுமலை; குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தொல்லியல் மன்றம் சார்பில் சிறப்பு பயிலரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் பல்வேறு தொல்லியல் சின்னங்கள், அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட சின்னங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன.மாணவர்களுக்கு, தொல்லியல் மன்ற ஆசிரியர்கள் அதற்கான விளக்கமளித்தனர். தொடர்ந்து தொல்பொருள் ஆராய்ச்சி பயிலரங்கம் நடந்தது.மாநில தொல்லியல் ஆராய்ச்சித்துறை அலுவலர் கவிதா, மாணவர்களுக்கு தொல்லியல் சின்னங்கள், அகழ்வாராய்ச்சிகள் குறித்து பேசினார். தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். உதவித்தலைமையாசிரியர்கள் ஜோதிமணி, சக்திவேல்ராஜா முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து மாணவர்கள், கொங்கல்நகரம் அகழாய்வு பணிகளை பார்வையிட அழைத்துச்செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் விமலா, உடற்கல்வி ஆசிரியர் முகமது அஸ்லாம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ