உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி விற்க விரும்பும் விவசாயியா?

காய்கறி விற்க விரும்பும் விவசாயியா?

திருப்பூர்:திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில், 284 விவசாயிகள் தினசரி காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.உழவர் சந்தை விரிவாக்கத்துக்கு பின், கடைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், காய்கறி விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதிகாலை, 3:00 முதல், 7:00 மணி வரை உழவர் சந்தை அலுவலரை சந்திக்கலாம்.உரிய விண்ணப்பத்தை பெற்று நில உடைமை ஆவணங்களான சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார், ரேஷன் கார்டு நகல், போட்டோ உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.விதிமுறைக்குட்பட்டு, கடைகள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உழவர் சந்தை அலுவலர் ஷர்மிளா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ