உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் முன் வாக்குவாதம்

கோவில் முன் வாக்குவாதம்

அவிநாசி:அவிநாசி கோவில் வளாகத்தில், பக்தர்களுடன் கோவில் ஊழியர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கடந்த சில நாள் முன், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த கோவில் ஊழியர், கார்த்திக்கேயன் என்பவர், 'இங்கு போட்டோ எடுக்கக்கூடாது,' எனக்கூறி உள்ளார்.இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த, ஓதுவார் சங்கர், 'அனுமதியின்றி போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது,' என்று கூறியதும், போட்டோ எடுத்தவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து, அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்