மேலும் செய்திகள்
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அபாரம் sports covai
31-Jul-2024
திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில், தெற்கு குறுமைய மாணவர், மாணவியர் பிரிவு, 14, 17 மற்றும், 19 வயது பிரிவுக்கான போட்டிகள் நேற்று நடந்தது.மாணவர், 14, 17 மற்றும், 19 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டு பிரிவிலும் ஆறு போட்டிகளில் பிரன்ட்லைன் பள்ளி முதலிடம். இரட்டையர், 14, 17, 19 வயது பிரிவில், கிட்ஸ் கிளப் இரண்டாமிடம். ஒற்றையர், 19 வயதில், விவேகானந்தா பள்ளி; 14 மற்றும், 17 வயதில், டி.என்.எஸ்.எஸ்., காந்தி வித்யாலயா, 2 வது இடம் பெற்றது.மாணவியர் பிரிவுமாணவியர், 14, 17 வயது பிரிவில், பிரன்ட்லைன் முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி, இரண்டாமிடம். 19 வது பிரிவில் பிரன்ட்லைன் முதலிடம். இரட்டையர் பிரிவு, 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி முதலிடம், 14 மற்றும், 17 வயது பிரிவில், கிட்ஸ் கிளப், 2 வது இடம். 19 வயது பிரிவில், வித்யவிகாசினி இரண்டாமிடம்.
31-Jul-2024