உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுவனின் விரல்களில் பிறக்கும் எழில் ஓவியங்கள்

சிறுவனின் விரல்களில் பிறக்கும் எழில் ஓவியங்கள்

சிலருக்கு இயல்பாகவே சில பழக்கங்கள் கைகூடும்; அவற்றை திறமையாக்கிக் கொண்டால், புகழின் உச்சாணிக்கு அவர்களை கொண்டு சேர்த்து விடும்.அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி, துரைசாமி நகரில் வசிக்கும் விக்ரம் - ரேவதி லட்சுமியின், 14 வயது நிரம்பிய மகன் சூரஜ், ஓவியம் வரைவதில் இயல்பாகவே திறமைசாலியாக உள்ளார்.விரல்கள் பென்சிலை பிடித்தால் எழில் ஓவியங்கள் பிறக்கின்றன. சிலருக்கு மட்டும் எளிதில், வாய்த்து விடும் ஓவியக்கலை, சூரஜ்க்கு எளிதாக கைகூடியுள்ளது ஆச்சரியமே.சூரஜ், அணைப்புதுாரிலுள்ள ஏ.கே.ஆர்., அகாடமியில், 8ம் படித்து வருகிறார். கண்ணில் பார்க்கும் ஓவியத்தை, அச்சு அசலாக வரைவதில் திறமை பெற்றுள்ள அவர், 'ஸ்கேட்டிங்' விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.''சின்ன வயசில் இருந்தே, எதையாவது வரைஞ்சுக்கிட்டே இருப்பான். போகப் போக, கண்ணில் பார்க்கிறதை அப்படியே வரைய துவங்கினான்.ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் 'ஸ்கேட்டிங்'ன்னு, அவனுக்கு நேரம் சரியா இருக்கிறதால, ஓவியத்துல கூடுதல் கவனம் செலுத்தறது, கொஞ்சம் சிரமமா இருக்கு.இருந்தாலும், கிடைக்கிற நேரத் துல, ஓவியம் வரையறான்...'' என்கிறார் அவரது தாய் ரேவதி, பெருமிதம் பொங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி