உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலம் கட்டுமானம் மும்முரம்; போக்குவரத்து நெரிசல் குறையும்

பாலம் கட்டுமானம் மும்முரம்; போக்குவரத்து நெரிசல் குறையும்

திருப்பூர்;நொய்யல் ஆற்றின் மீது புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலம் கட்டி முடிக்கப்பட்டால், ஆலங்காடு வழியாக வாகனப் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக மாறும்.நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கில், நடராஜா தியேட்டர் அருகே ஒரு உயர் மட்டப் பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.இப்பகுதியில் ஏற்கனவே ஒரு உயர்மட்டப் பாலம் கட்டி பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தில் கீழ் இந்த பாலத்தின் அருகிலேயே இந்த புதிய பாலம் கட்டப்படுகிறது. இப்புதிய பாலம் கட்டி முடித்த பின்னர், ஒரு வழிப்பாதையாக உள்ள இந்த ரோடு இரு வழிப்பாதையாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி குறையும், வளர்மதி பாலம் வழியிலான போக்குவரத்து நெரிசலும் குறையும் வாய்ப்பு உள்ளது.பாலம் கட்டுமானப் பணியை நேற்று மாநக ராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொண்டு பாலத்தை பயன்பாட்டுக்கு ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ