உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டமலைக்கரை ஓடை குறுக்கே ரூ.3.91 கோடியில் தடுப்பணை

வட்டமலைக்கரை ஓடை குறுக்கே ரூ.3.91 கோடியில் தடுப்பணை

திருப்பூர்: காங்கயம் தாலுகா, வீராணம்பாளையம் ஊராட்சி, வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே, தடுப்பணை கட்டும் அறிவிப்பு வெளியானது. அமராவதி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாக, வட்டமலைக்கரை ஓடை உள்ளது.பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில், அனுப்பட்டி என்ற இடத்தில் துவங்கி, பல்லடம், கொடுவாய் பகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றும் பி.ஏ.பி., கசிவுநீர், 60 கி.மீ., சென்று, வட்டமலைக்கரை ஓடை அணையில் சேகரமாகி, உபரிநீர் மீண்டும் அமராவதி ஆற்றில் கலக்கிறது.நபார்டு வங்கி நிதியுதவியுடன், 3.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே, வீரணம்பாளையத்தில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது.மொத்தம், 45 மீட்டர் நீளம், 1.20 மீட்டர் உயரத்தில், 1.452 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கும் வசதியுடன் கட்டப்பட உள்ளது.தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், புதிய தடுப்பணை அமைக்கும் பணியை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன், செயற்பொறியாளர் சுப்பிரமணியன், திட்ட பணிகள் குறித்து விளக்கினர். உதவி பொறியாளர் (உப்பாறு) சிவராஜா, கோகுல சந்தான கிருஷ்ணன்(அமராவதி) மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி