உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோரம் கோழிக்கழிவுகள்

சாலையோரம் கோழிக்கழிவுகள்

அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையத்தில் இருந்து, அய்யம்பாளையம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் ஆங்காங்கே கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதே ரோட்டில் மக்கள் மற்றும் பள்ளி மாணவர் சென்று வருகின்றனர். கொட்டப்படும் கோழிக்கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால், பலரும் பாதிக்கப்படுகின்றனர். கோழிக்கழிவு மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவு மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ