உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்க்கஸ் பழக சறுக்கும் சாலை  

சர்க்கஸ் பழக சறுக்கும் சாலை  

வாகனங்கள் இடையூறு கலெக்டர் அலுவலகத்தில், நிறுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. – தங்கபாண்டி, பல்லடம் ரோடு. ஊழியர்கள் ‘ஆப்சென்ட்’ திருப்பூர், அமர்ஜோதி கார்டனில் ஒரு மாதமாக குப்பை எடுக்க ஊழியர் வருவதில்லை. – ராதா, அமர்ஜோதி கார்டன். வேகத்தடை வேண்டும் திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர். நகரில் வேகத்தடை வேண்டும். வாகனங்கள் வேகமாக பயணிப்பதால் விபத்து ஏற்படுகிறது. – ராஜவேல், எஸ்.ஆர். நகர். (படம் உண்டு) வீணாகும் தண்ணீர் கருப்பகவுண்டம்பாளையம், ஓம் சாந்தி நிகேதன் பள்ளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. – விஜயன், கருப்பகவுண்டம்பாளையம். (படம் உண்டு) குமார் நகர் பஸ் ஸ்டாப் மின்வாரிய அலுவலகம் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது; சாலை சேதமாகிறது. – பிரசாந்த், குமார் நகர். (படம் உண்டு) கழிவுநீரால் அவதி மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், இட்டேரி ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, துர்நாற்றம் வீசுகிறது. – சிவா, மேட்டுப்பாளையம். (படம் உண்டு) தெருநாய்த் தொல்லை தாராபுரம் ரோடு, சந்திராபுரம், இந்திரா நகரில் நாய்த்தொல்லை அதிகரித்து வருகிறது. – முத்துக்குமார், சந்திராபுரம். (படம் உண்டு) இதுவா சாலை? பல்லடம், உகாயனுார், கந்தம்பாளையம் ரோடு ஜல்லிக்கற்கள் நிறைந்து சறுக்கும் சாலையாக காணப்படுகிறது. – குமார், உகாயனுார். (படம் உண்டு) ரியாக் ஷன் மின் கம்பம் மாற்றம் கருவம்பாளையம், பாலாஜி நகரில் மின்கம்பம் சாய்ந்திருப்பது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மின் கம்பம் மாற்றப்பட்டு விட்டது. – ஞானி, பாலாஜி நகர். (படம் உண்டு) குப்பை அகற்றம் கரைப்புதுார், நொச்சிபாளையம், பண்டாரி நகர் – பாரியூர் அம்மன் நகரில் குப்பை தேங்கியிருப்பது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. ஊராட்சி மூலம் குப்பை அள்ளப்பட்டு விட்டது. – முத்துகுமாரசுவாமி, பண்டாரி நகர். (படம் உண்டு)  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை