உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில சிலம்பம் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

மாநில சிலம்பம் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

உடுமலை; மாநில அளவில் சிலம்பப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, வாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.சென்னை டான் பாஸ்கோ கலைக்கல்லுாரியில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இப்போட்டியில், ஒன்பது வயதினருக்கான ஒற்றை சிலம்பம் சுற்றும் போட்டியில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.அதில், வாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி கனிஷ்கா, மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ