நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
உடுமலை; மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.மடத்துக்குளம் வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ்ராகவன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., சாதிக் பாட்ஷா, உதவி திட்ட அலுவலர்கள் சம்பத்குமார், சரண்யா, உணவு பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நல்லூர் நுகர்வோர் நல மன்ற செயலாளர் வேல் முருகன், தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் துணைச்செயலாளர் அன்பழகன் ஆகியோர், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், நுகர்வோர் உரிமைகள் குறித்து விளக்கினர்.