கட்சி மாறிய கவுன்சிலர்
அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் 16வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக உள்ளவர் தங்கவேல், 58. அ.தி.மு.க., திருமுருகன்பூண்டி 16வது வார்டு கிளைச் செயலாளராக இருந்தார். இவர் எம்.பி., சுப்பராயன், திருப்பூர் புறநகர் மாவட்ட இந்திய கம்யூ., செயலாளர் இஷாக், திருமுருகன் பூண்டி நகர செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.