சுரங்க பாலத்தில் பள்ளம்
உடுமலை, ;உடுமலை தளி ரோட்டில், ரயில்வே சுரங்க பாலம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில், நுாற்றுக்கணக்கான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கு குடியிருப்புகளில் வசிப்போர் பயன்படுத்தி வருகின்றனர்.பாலத்தில், மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேறும் கட்டமைப்புகள் முறையாக அமைக்கப்படாத நிலையில், கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி வருகிறது.இதனால், இப்பாலத்தின் ஓடு தளத்தில், பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.எனவே, பாலத்தின் ஓடு தளத்தில் உள்ள குழிகளை சரி செய்து, கழிவு நீர் வடிகால், மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.