உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.பல லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்பு சேதம்

ரூ.பல லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்பு சேதம்

திருப்பூர்:காங்கயத்தில், தேங்காய் பருப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் பருப்பு தீயில் எரிந்து சேதமானது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், இல்லியம்புதுார் ரோடு, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜெயசெந்தில்குமார், 45. இவர் அதே பகுதியில் ஸ்ரீ வேல் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்தில் தேங்காய் பருப்பு குடோன் வைத்துள்ளார்.நேற்று முன்தினம் வழக்கம்போல், பணியை முடித்து விட்டு, இரவில் வீடு திரும்பினார். நேற்று காலை, 6:30 மணியளவில், குடோனில் இருந்து மளமளவென புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.காங்கயம் தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சென்று, மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குடோனில், 4 ஆயிரம் மூட்டையில் இருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய் பருப்பு எரிந்து சேதமானது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ