உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காய்கறி வரத்து குறைவு விலையும் அதிகரிப்பு

காய்கறி வரத்து குறைவு விலையும் அதிகரிப்பு

உடுமலை:உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம் பகுதி சுற்றுப்புற கிராமங்களில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. விளையும் பொருட்களை உடுமலை உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக, பருவமழைகள் ஏமாற்றியதோடு, வெயிலின் தாக்கமும் அதிகரித்ததால், கடும் வறட்சி நிலை ஏற்பட்டது. இதனால், உடுமலை பகுதிகளில் காய்கறி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது. காய்கறி உற்பத்தியும் பாதித்து சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது.உடுமலை உழவர்சந்தையில், நேற்று தக்காளி விலை, கிலோ ரூ.20 முதல் 24 வரையும், உருளைக்கிழங்கு, 55 - 60 வரையும், சின்னவெங்காயம், 40 - 48 வரையும், பெரியவெங்காயம், 30 - 34 வரையும், மிளகாய், 60 - 70 வரையும், கத்தரிக்காய், 26 - 32 வரையும், வெண்டைக்காய், 35 - 40 வரையும்,முருங்கைக்காய், 30 - 35 வரையும், பீர்க்கங்காய், 75 - 80 வரையும், சுரைக்காய், 15 - 20 வரையும், புடலங்காய், 25 - 30 வரையும், பாகற்காய், 70 - 75 வரையும், தேங்காய், 30 - 37 வரையும், முள்ளங்கி, 25 - 30 வரையும், பீன்ஸ், 150 - 170 வரையும், அவரைக்காய், 80 - 90 கேரட், 70 - 75, வாழைப்பழம் 40 - 50 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை