உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வளர்ச்சி திட்ட பணி; கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணி; கலெக்டர் ஆய்வு

திருப்பூர்; அனைத்து அரசு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, மகளிர் திட்டம், சுகாதாரம், பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தாட்கோ, மதிய உணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 'பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, அரசு துறை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.ஆடி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (பொது) மகாராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ