உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம வறுமை போக்கும் வளமிகு வட்டார திட்டம் மாவட்ட நிர்வாகங்கள் சுறுசுறு

கிராம வறுமை போக்கும் வளமிகு வட்டார திட்டம் மாவட்ட நிர்வாகங்கள் சுறுசுறு

திருப்பூர்: 'வளமிகு வட்டார திட்டம்' மாவட்டந்தோறும் செயல்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே முதல் முயற்சியாக கிராமம் ஒன்றில், வேலைவாய்ப்பு பயிற்சியகம் அமைக்கப்படுகிறது.மாநிலத்தில் உள்ள வட்டாரங்களுக்கு இடையே காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை சரிசெய்யவும், பின்தங்கிய கிராமங்களில் வறுமையை போக்கி வேலை வாய்ப்பு பெருக்கும் நோக்கிலும், 'வளமிகு வட்டாரங்கள் திட்டம்' அமலில் இருந்து வருகிறது.அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பின்தங்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அக்கிராமங்களில் கல்வி, சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, வேலை வாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில், திட்டங்களை செயல்படுத்தி, அதில் அக்கிராம மக்களை பங்கேற்கச் செய்து, அதன் வாயிலாக மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதே நோக்கம்.கடந்த, 2023 - 2024ம் நிதியாண்டில், 50 வளமிகு வட்டாரங்கள் திட்டத்தை செயல்படுத்த, அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதன்படி, மாவட்டந்தோறும் பின்தங்கிய வட்டாரங்கள் தேர்வு செய்து, அவற்றின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகங்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், குண்டடம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதல் முயற்சியாக, மாவட்ட வேலை வாய்ப்பு துறை சார்பில், அங்கு, வேலை வாய்ப்பு பயிற்சியகம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில்,''திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் போட்டித்தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவசமாக தரமான பயிற்சி வழங்கப்படுகிறது. ''கடந்த நான்காண்டில், பயிற்சி பெற்ற பலரில், 43 பேர் அரசுப்பணி பெற்றுள்ளனர். குண்டடம் கிராமத்தில் வட்டார வளமிகு திட்டத்தில், வேலைவாய்ப்புத்துறை சார்பில், நுாலகத்துடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்க, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், ஒப்புதல் பெற்றுள்ளார். ''அடுத்த மாதம், 3ம் தேதி முதல் இப்பயிற்சி மையம் செயல்பட துவங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை