மேலும் செய்திகள்
போச்சம்பள்ளியில் நாளை தி.மு.க. பொதுக்கூட்டம்
07-Feb-2025
திருப்பூர்:திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சாமிநாதன் அறிக்கை:தமிழகத்தில் தொகுதி சீரமைப்பு மூலம் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நடவடிக்கை, நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அவ்வகையில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 6ம் தேதி, மாலை 6:00 மணிக்கு காங்கயம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவிலிலும், 7ம் தேதி தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனுாரிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியினர் மற்றும் சார்பு அமைப்பினர் இதில் திரளாகப் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
07-Feb-2025