மேலும் செய்திகள்
இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
30-Aug-2024
பொங்கலூர்:பொங்கலுார் ஒன்றியம், பெரியாரியபட்டியைச் சேர்ந்தவர் மணி, 60, விவசாயி. இவர் தோட்டத்தில் புகுந்த நான்கு நாய்கள் ஏழு செம்மறியாடுகளை கடித்தது. இதில், நான்கு உடனடியாக இறந்து விட்டது. மீதமுள்ள ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.இதேபோல சின்னாரியபட்டி சங்கம் தோட்டத்தை சேர்ந்த முத்துசாமி, 60 என்பவரின் ஆறு ஆடுகள், பூசாரி பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன்,55 என்பவரின், 15 ஆடுகள் ஆக இவற்றை நாய்கள் கடித்துக் கொன்றது. காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளிலும் தொடர்ந்து இதே பிரச்னை நிலவுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோட்டத்தில் நாய்கள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வெறி நாய்களை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். --நாய் கடித்ததால் கழுத்தில் காயமடைந்த ஆடு
30-Aug-2024