உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை ஆசாமிகள் அட்டகாசம்

போதை ஆசாமிகள் அட்டகாசம்

பொங்கலுார் : பொங்கலுார், உகாயனுார் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை கட்டடம் உள்ளது. கட்டடத்துக்குள் போதை ஆசாமிகள், மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை போட்டுவிட்டு செல்கின்றனர். குப்பைகளுக்கு தீயும் வைத்து விடுகின்றனர். நிழற்குடையில் நிற்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் போதை ஆசாமிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகம் நிழற்குடையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ