உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.90 லட்சத்தில் சாலை அமைத்தும் புண்ணியமில்லை! 2 ஆண்டில் புண்ணியவதி சாலை ஆயுள் இழந்த அவலம்

ரூ.90 லட்சத்தில் சாலை அமைத்தும் புண்ணியமில்லை! 2 ஆண்டில் புண்ணியவதி சாலை ஆயுள் இழந்த அவலம்

திருப்பூர் : 'நமக்கு நாமே' திட்டத்தில், 90 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்ட 'புண்ணியவதி சாலை', இரண்டே ஆண்டில் சேதமடைந்தது. இதனால், பெரும் தொகையை பங்களிப்பாக வழங்கிய மக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவில் இருந்து முதலிபாளையம் செல்லும் புண்ணியவதி சாலை, பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்தது. இதனால், இங்கு வசிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். சாலையை செப்பனிட்டு, பராமரிக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இருப்பினும், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் மட்டுமே இது சாத்தியம் என, மாநகராட்சி நிர்வாகம் தெளிவுப்படுத்தியது. அதன்படி, அங்கு வசிக்கும் பொதுமக்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பங்களிப்பு தொகை வழங்க, அரசின் நிதி சேர்த்து, 90 லட்சம் ரூபாயில் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது; கடந்த, 2022ல், பணி நடந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பணி நிறைவும் பெற்றது.இருப்பினும், சாலையோரம் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல காரணங்களாக தோண்டப்பட்ட சாலை, சரிவர மூடப்படவில்லை என்பது, அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. இதனால், சாலை முழக்க சேதமாகி, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியிருக்கிறது;தற்போது மழை பெய்து வரும் நிலையில் படுமோசமாகியிருக்கிறது என குடியிருப்புவாசிகள் புலம்பகின்றனர்.இச்சாலையில் தான் பள்ளி பேருந்துகள், பள்ளிக் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மற்றும் 'சிட்கோ' தொழிற்பேட்டை செல்லும் தொழிலாளர்கள் என பலரும் பயணிக்கும் நிலையில், பொதுமக்களின் பங்களிப்புடன், 90 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்ட சாலை, இரண்டே ஆண்டுகளில் தன் ஆயுட் காலத்தை இழந்தது, துரதிருஷ்டவசமானது என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.எனவே, 'திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், இதற்கு பொறுப்பேற்று, சாலையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் சார்பில், சரவண சுப்ரமணியன் என்பவர், மனு அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ