உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னாள் மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சி

முன்னாள் மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சி

பல்லடம்:முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சி, பல்லடம் அரசு பள்ளியில் நடைபெற்றது.பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1986 முதல் 1991ம் ஆண்டு வரை, 6ம் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை படித்த மாணவர்களின்சந்திப்பு நிகழ்ச்சி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. திருப்பூர், பல்லடம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், ஷேக் மக்துாம், கிருஷ்ணகுமார், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், அரசு கல்லுாரி பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என, பல்வேறு துறைகளிலும் உள்ளனர்.வாட்ஸ் அப், முகநுால் உள்ளிட்டவற்றின் மூலம் மட்டுமே சிலர் தொடர்பில் இருந்த நிலையில், அனைவரையும் ஒருங்கிணைத்து சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். இதன்படி, தொடர்பில் இருந்த நண்பர்கள் மூலம், நீண்ட நாட்களுக்குப் பின், அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிப் பருவத்தின் போது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.தொடர்ந்து, தாங்கள் படித்த வகுப்பறைகளை சுற்றிப் பார்த்து மலரும் நினைவுகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டு பிரியாவிடை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி