கண்காட்சி மையம்; நிறைவேறாத கனவு
திருப்பூர்; திருப்பூரில், ஆயத்த ஆடை, துணி, நுாலிழை ரகங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி; நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இயந்திர கண்காட்சி என, இருவேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் தொழில்துறையினர், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் நடந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.வெளிநாட்டு கண்காட்சி தொடர்பான தகவல் கிடைத்தாலும், சிலர் மட்டுமே பங்கேற்க முடிந்தது; தொழில்நுட்ப பகிர்வும், விழிப்புணர்வும் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பாகக் கிடைத்தது. ஊன்றுகோலாக கண்காட்சி
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் போன்ற அமைப்புகளின் முயற்சியால், வெளிநாடுகளில் நடந்த கண்காட்சிகள், திருப்பூரிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது, ஒட்டுமொத்த பின்ன லாடை தொழில் வளர்ச்சிக்கும் ஊன்று கோலாக மாறியிருக்கிறது. 2010 முதல் ஒலிக்கும் குரல்
இருப்பினும், கண்காட்சிகள் நடத்த போதிய இடவசதி இல்லை. திருமண மண்டபங்களில் நடத்தப்பட்டு வந்தது. நிரந்தர கண்காட்சி மையம் திருப்பூரில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை, 2010 முதல், தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இருப்பினும், அதற்காக சிறிய முயற்சியும் துவங்கப்படவில்லை.'நிட்-டெக்' மற்றும் 'நிட்ேஷா' போன்ற கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், தற்காலிக ெஷட் அமைத்து, முழுவதும் குளிரூட்டப் பட்ட வசதியுடன் கண்காட்சி நடத்தி வருகின்றனர். இருப்பினும், நிரந்தர கண்காட்சி வளாகம் அமைந்தால் மட்டுமே, பல வகையில் பயனுள்ளதாக இருக்கும். 20 ஏக்கரில் அமையவேண்டும்
இந்தியா நிட்பேர் அசோசியேஷன் என்ற பெயரில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இணைந்து, புதிய கண்காட்சி மையம், திருமுருகன்பூண்டி அருகே அமைக்கப்பட்டது. அது, சிறிய ஸ்டால்களுடன் ஜவுளி கண்காட்சி நடத்த பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், இயந்திர கண்காட்சி நடத்தும் அளவுக்கு வசதி - வாய்ப்புகள் அங்கு இல்லை.மத்திய, மாநில அரசு மானியத்துடன், திருப்பூரில் நிரந்தர கண்காட்சி மையம், குறைந்தது 20 ஏக்கர் பரப்பில் அமைய வேண்டும்.