உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

திருப்பூர் லயன்ஸ் கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், குமரன் ரோடு, லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் பரமசிவம், பொருளாளர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 147 பேர் பங்கேற்றனர். உயர்சிகிச்சைக்கு, 54 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். மதிய உணவு வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் சார்பில், ஒவ்வொரு மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை இலவச கண் சிகிச்சை, ஆலோசனை முகாம் நடக்கிறது. அவ்வகையில், அக்., மாத முகாம், 20ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை