உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேரளாவுக்கு பறக்கும் கோவக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கேரளாவுக்கு பறக்கும் கோவக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

உடுமலை;விளைநிலங்களில் நிரந்தர பந்தல் அமைத்து, கோவக்காய் சாகுபடியில், ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆயிரக்கணக்கான ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில், பந்தல் அமைத்து, பாகற்காய், பீர்க்கன், புடலங்காய் சாகுபடியும் மேற்கொள்கின்றனர். தோட்டக்கலைத்துறை வாயிலாக விளைநிலங்களில் பந்தல் அமைக்க, மானியமும் வழங்கப்படுகிறது.கடந்தாண்டு, பல்வேறு காரணங்களால் பந்தல் காய்கறியில், நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.சற்று இடைவெளி விட்டு, இந்தாண்டு, குறுகிய பரப்பளவில், பந்தல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கோவக்காய் சாகுபடி செய்து, அறுவடை பணிகள் நடக்கிறது.விவசாயிகள் கூறுகையில், 'கோவக்காய் சாகுபடியில், கொடி, 90 நாட்கள் வளர்ந்த பின், காய்களை அறுவடை செய்யலாம். கேரளாவுக்கு, இவ்வகை காய் அதிகளவு விற்பனைக்கு செல்கிறது. இந்த சீசனில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை