உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓடையில் பாய்கிறது பிரின்டிங் கழிவுநீர் மாசுக்காட்டுபாடு வாரியம் மவுனம்

ஓடையில் பாய்கிறது பிரின்டிங் கழிவுநீர் மாசுக்காட்டுபாடு வாரியம் மவுனம்

திருப்பூர்;தென்னம்பாளையம் அருகே சங்கிலிப்பள்ளம் ஓடையில், தினம் வெவ்வேறு நிறத்தில், பிரின்டிங் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடுகிறது.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், அனுமதி பெறாத சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், பட்டன் - ஜிப் டையிங் நிறுவனங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன. இந்நிறுவனங்கள், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை ஆங்காங்கே நீர் நிலைகளில் திறந்துவிட்டு, மாசு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.கடந்த சில மாதங்களாக திருப்பூரில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சரிவர களப்பணி மேற்கொள்வது இல்லை. அந்த தைரியத்தில், பட்டப்பகலிலேயே கூட சாயக்கழிவுநீரை திறந்துவிடுகின்றனர்.திருப்பூர் தென்னம்பாளையம் அருகே, சங்கிலிப்பள்ளம் ஓடையில், தினமும் காலை நேரங்களில், பிரின்டிங் கழிவுநீர் பாய்ந்தோடி வருகிறது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை என ஒவ்வொருநாளும் வெவ்வேறு நிறங்களில், ரசாயனம் மிக்க கழிவுநீர் சங்கிலிப்பள்ளம் ஓடையில் பாய்ந்து, நொய்யலாற்றில் சென்று சேர்கிறது. இதனால், சங்கிலிப்பள்ளம் ஓடை மற்றும் நொய்யலாற்று நீர், தொடர்ந்து மாசுபட்டுவருகிறது.மாசுகட்டுப்பாடு வாரியத்தை முடுக்கிவிட்டு, முறைகேடு சாய ஆலைகளை கண்டறிந்து தடுக்க, கலெக்டரின் சாட்டை சுழலவேண்டியது அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மணயன்
மார் 30, 2024 09:36

தற்போதைய ஆட்சியின் அவலம் .மாசுக்கட்டுப்பாட்டை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை