உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சதுரங்க போட்டியில் மாணவியர் ராஜாங்கம்

சதுரங்க போட்டியில் மாணவியர் ராஜாங்கம்

திருப்பூர் : திருப்பூர், குமார் நகர், பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் கோப்பைக்கான சதுரங்க போட்டி நேற்று நடந்தது. இதில், மாவட்டம் முழுதும் இருந்து, 164 பள்ளி மாணவர், 64 மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் மரியதாஸ் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட சதுரங்க அசோசியேஷன் நிர்வாகிகள் போட்டியை, ஒருங்கிணைந்து நடத்தினர்.மாணவர் பிரிவில் முதல் மூன்று இடங்கள் முறையே கோகுல் கிருஷ்ணா (திருமுருகன் மெட்ரிக்), மாதவன் (பிஷப் உபகாரசாமி பள்ளி), பத்மபிரியன் (அரசு மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம்) கைப்பற்றினர். மாணவியர் பிரிவில், டிரினிடாமெர்சி (இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக்), ஹாசினி (முருகு மெட்ரிக்), ஆதிசம்ரித்தா (ஸ்ரீசாய்) வெற்றி பெற்றனர். முதல் இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ