உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கேரம் போட்டியில் அரசு பள்ளிகள் ஆஹா

மாவட்ட கேரம் போட்டியில் அரசு பள்ளிகள் ஆஹா

திருப்பூர்:மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் அபாரமாக விளையாடி, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.சிக்கண்ணா கல்லுாரி உள் விளையாட்டு அரங்கில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் கேரம் போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் 123 பேர்; மாணவியர் 114 பேர் பங்கேற்று கேரம் ஆடினர்.

ஒற்றையர் பிரிவு

மாணவியருக்கான கேரம் ஒற்றையர் போட்டியில், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரினி பிரியா முதலிடம்; பெரியாயி பாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா இரண்டாமிடம்; அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி பிருந்தா மூன்றாமிடம் பிடித்தனர்.மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தர்ஷன் முதலிடம்; அய்யங்காளிபாளையம் வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி பிரகதீஸ்வரன் இரண்டாமிடம்; பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஹேமந்த் குமார் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

இரட்டையர் பிரிவு

மாணவியர் இரட்டையர் பிரிவு கேரம் போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி சிவகாமி - மதுமிதா ஜோடி முதலிடம்; ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி தீபிகா - மங்கையர்கரசி ஜோடி இரண்டாமிடம்; இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி ஸ்ரீநிதி - ஹரினி ஸ்ரீ ஜோன்ஸ் மூன்றாமிடம்.மாணவர் இரட்டையர் ஆட்டத்தில், அய்யங்காளிபாளையம் வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரவீன்குமார் - பிரகதீஸ்வரன் ஜோடி முதலிடம்; பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி தர்ஷன் - ஹரிஹரசுதன் ஜோடி இரண்டாமிடம்; அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தீபக் - அஜிஸ் மூன்றாமிடம் பிடித்தனர்.மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவியர் ஹரினி பிரியா, மதுமிதா, சிவகாமி; மாணவர்கள் தர்ஷன், பிரவீன்குமார், பிரகதீஸ்வரன் ஆறுபேரும் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி